செய்திகள்

ஸ்ரீலீலா பிறந்த நாளில் புதிய பட போஸ்டர்!

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா பிறந்த நாளில் புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

அமெரிக்காவில் பிறந்த தெலுங்கரான ஸ்ரீலீலா பெங்களூரில் வளர்ந்தவர். மருத்துவம் படித்த இவர் 2019-ல் கன்னட படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கில்தான் பிரபல நடிகையாக அறியப்படுகிறார்.

ரவி தேஜாவுடன் தமாகா படத்தில் நடித்து கவனம் பெற்றவருக்கு அப்படத்தில் இடம்பெற்ற பல்சர் பாடல் பிரபலமாக்கியது. சிறுவயதிலிருந்தே பரதநாட்டியம் ஆடிப்பழகிய ஸ்ரீலீலா நடனமாடினால் உடல் வில்லாக மாறிவிடுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, லீலாவின் சினிமா வாழ்க்கை புயல் வேகத்தில் மாறியது.

தற்போது பவன்கல்யாண், நந்தமுரி பால கிருஷ்ணா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

சமீபத்தில், குண்டூர் காரம் படத்தில் நடித்தார். அதிலும், ‘குர்ச்சி மாடதபெட்டி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களைக் கிறங்கடித்தார். சில தமிழ் படங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் 23-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஸ்ரீ லீலாவுக்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நிதின் உடன் ராபின்ஹுட் படத்தில் நடிக்கிறார். இதில் ஸ்ரீ லீலாவின் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் ஸ்ரீ லீலாவின் கதாபாத்திர பெயர் நீரா வாசுதேவ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

உயரம் எவ்வளவு எனத் தெரியவில்லை. ஆனால் தலைக்கணம் அதிகமுள்ள கதாபாத்திரம் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT