தாய்லாந்தில் பிறந்தநாளைக் கொண்டாடிய அஞ்சலி!
நடிகை அஞ்சலி தன் பிறந்தநாளை தாய்லாந்தில் கொண்டாடியுள்ளார்.
கற்றது தமிழ், அங்காடி தெரு, தம்பி வெட்டோத்தி சுந்தரம், இறைவி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் நடிகை அஞ்சலி. எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றவர் இன்றும் நல்ல கதாபாத்திரங்களில் முழுமையான நடிப்பை வழங்கி வருகிறார்.
தமிழில் கதைநாயகியாக ’ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நடித்த கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
Advertisement
Advertisement
தற்போது, தன் 50-வது படமான ‘ஈகை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தன் 39-வது பிறந்தநாளை தாய்லாந்தில் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளதை புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அப்பதிவில், “சூரியனைச் சுற்றி மற்றொரு பயணமும் முடிந்தது. உங்களின் தீராத அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.” எனக் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.