கர்ப்பமாக இருக்கும் தீபிகாவுக்கு உதவிய பிரபாஸ் படங்கள்: யோகேன் ஷா மற்றும் வைஜெயந்தி நெட் ஒர்க்ஸ்.
செய்திகள்

கர்ப்பமாக இருக்கும் தீபிகாவுக்கு உதவிய பிரபாஸ்! கிண்டல் செய்த அமிதாப் பச்சன்!

முன் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தீபிகாவுக்கு பிரபாஸ் உதவியதும் அமிதாப் பச்சன் கிண்டல் செய்ததும் வைரலாகி வருகிறது.

DIN

நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2989 ஏடி படத்தின் முன் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தீபிகாவுக்கு பிரபாஸ் உதவியதும் அபிதாப் பச்சன் கிண்டல் செய்ததும் வைரலாகி வருகிறது.

பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் 'கல்கி 2898ஏடி'.

பிரபாஸுடன் கமல்ஹாசனும், அமிதாப் பச்சனும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜூன் 27-ஆம் தேதி 'கல்கி 2898 ஏடி' திரைக்கு வரவிருக்கிறது.

நேற்று (ஜூன் 19) நடைபெற்ற முன் வெளியீட்டு விழாவில் தீபிகா படுகோன் மேடைக்கு வந்தபோது நடிகர் ராணா டகுபதி, “நீங்கள் இன்னும் கல்கி கதாபாத்திரத்தில்தான் இருக்கிறீர்களா?” எனக் கேட்பார். அதற்கு தீபிகா படுகோன், “நிச்சயமாக, இந்தப் படம் 3 வருடமாக உருவாகி வருகிறது. இன்னும் சில மாதங்கள்தானே இது இருக்கட்டும்” என ஜாலியாகக் கூறியுள்ளார்.

நாக அஸ்வின் மூளையில் இருந்த கதையை விரைவில் அனைவரும் பாரக்கபோகிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறதென தீபிகா படுகோன் பேசினார்.

பேசிவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கும்போது தீபிகாவுக்கு உதவி செய்வார் பிரபாஸ். உடனே அமிதாப் பச்சனும் பிரபாஸை காப்பாற்றுவதுபோல பாவனை செய்வார். இது அங்கிருந்த அனைவரையும் சிரிப்பலையில் மூழ்கடிதத்து.

தீபிகா படுகோன் நடிகர் ரன்வீர் சிங்கினை நவம்பர் 14, 2018இல் திருமணம் செய்தார். அடிக்கடி விவாகரத்து செய்வதாக வதந்திகள் பரவிவரும் நிலையில் தீபிகா தாயாகப்போகும் நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT