செய்திகள்

காரில் 220 கி.மீ. வேகத்தில் சீறி பாய்ந்த அஜித்!

DIN

நடிகர் அஜித் குமார் கார் ரேஸில் ஈடுபட்ட விடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது.

’மங்காத்தா’ படத்துக்குப் பின், நடிகர் அர்ஜுன் இத்திரைப்படத்தில் அஜித் குமாருடன் மீண்டும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் ஆரவ், ரெஜினா, சஞ்சய் தத், அருண் விஜய் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. தீபாவளிக்கு படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

இதற்கிடையே, துபையில் ரேஸ் கார் ஓட்டும் இடத்திற்குச் சென்ற நடிகர் அஜித், அங்குள்ள கார்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான சாலையில் ஓட்டிப் பார்த்தார்.

அப்போது, அஜித் மணிக்கு 230 கி.மீ. வேகத்தில் காரை இயக்கியது விடியோவில் பதிவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன் விடாமுயற்சி படப்பிடிப்பில் ஏற்பட்ட கார் விபத்தில் அஜித் காயமடைந்தார். ஆனால், மீண்டும் பயமில்லாமல் காரை இவ்வளவு வேகத்தில் இயக்கியது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT