நடிகை வேதிகா 
செய்திகள்

சைக்கோ த்ரில்லர் படத்தில் நடிக்க ஆசை: நடிகை வேதிகா

நடிகை வேதிகா சைக்கோ த்ரில்லர் போன்ற படங்களில் நடிக்க ஆர்வமுள்ளதாகக் கூறியுள்ளார்.

DIN

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் நடிகை வேதிகா. தமிழில் 2006இல் மதராஸி எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். முனி, சக்கரகட்டி, மலை மலை, பரதேசி படங்களில் நடித்து கவனம் பெற்றுள்ளார்.

கடைசியாக தமிழில் காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார். கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது 4 படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. தமிழில் விநோதன், பேட்ட ராப், ஜங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

முதல்முறையாக இணையத் தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார். யக்‌ஷினி என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தத் தொடரினை தேஜா மர்னி இயக்கியுள்ளார். ராம் வம்சி கிருஷ்ணா எழுதியுள்ள இந்தத் தொடரில் வேதிகா முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 6 எபிசோடுகள் உள்ள இந்தத் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் சமீபத்தில் வெளியாகியது.

இந்நிலையில் சினிமா எக்ஸ்பிரஸ் நேர்காணலில் வேதிகா கூறியாதாவது:

வேதிகா

பரதேசி படத்துக்குப் பிறகு எனக்கு நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள பல கதைகள் வந்தன. ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை. இயக்குநர் பாலாவுக்காக மட்டுமே அதில் நடித்தேன். அந்தக் கதாபாத்துரத்துக்காக என்னை தேர்வு செயததுக்கு பாலா சாருக்கு நன்றி. நான் நடித்த படங்களில் 99 சதவிகிதம் வருத்தமில்லை. ஒரு படத்தில் மட்டும் துணைக் கதாபாத்திரமாக நடித்தது மட்டுமே வருத்தம்.

எனக்கு பிடிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். எனக்கு சவாலான விசயங்கள் மிகவும் பிடிக்கும். இப்போது தமிழில் நானே எனக்கு குரல் கொடுக்கிறேன். இரட்டை வேடங்களில் நடிக்க ஆசை. ஆனால் அதை விடவும் பிளாக் ஸ்வான் (2010) படங்கள் போன்ற சைக்கோ த்ரில்லர் படங்களில் நடிக்க ஆசை. இதுபோல ஒரு படத்தில் ஏற்கனவே நடிக்கிறேன். விரைவில் அது குறித்த அப்டேட் தருகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

கூடமலையில் மது விற்றவா் கைது

புதுச்சேரியில் அரசு போட்டி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

அதிக வாடகை கட்டணம் நிா்ணயம்: வியாபாரிகள் எம்எல்ஏவிடம் புகாா்

ஆசிரியா் பற்றாக்குறையை தீா்க்கக் கோரி அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்

SCROLL FOR NEXT