செல்வராகவன்  படம்: இன்ஸ்டாகிராம்
செய்திகள்

புரிய வேண்டியவங்களுக்குப் புரியும் குமாரு: செல்வராகவன் கூறுவது என்ன?

இயக்குநர் செல்வராகவனின் எக்ஸ் பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

இயக்குநர் செல்வராகவனின் எக்ஸ் பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் இயக்குநர் செல்வராகவன். காதல் கொண்டேன், மயக்கமென்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் கடைசியாக தனுஷுடன் நானே வருவேன் படம் வெளியானது.

இவர் நடிகை சோனியா அகர்வாலை 2006இல் திருமணம் செய்து 2010இல் விவாகரத்து செய்தார். பின்னர் கீதாஞ்சலி ராமனை 2011இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். அடிக்கடி விவாகரத்து குறித்து தகவல்கள் பரவுவது இவரது விஷயத்தில் பழக்கமாகிவிட்டது. ஆனால் இவர் மகிழ்ச்சியான வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார்.

இயக்குநர் செல்வராகவன் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தனுஷுன் ராயன் படத்திலும் நடித்துள்ளார். விரைவில் புதுப்பேட்டை 2 வருமென சமீபத்தில் கூறியிருந்தார். செல்வராகவன் எக்ஸில் அடிக்கடி பதிவிட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று, “சொல்வதை ஒரு தலைப்போடு சொல்லலாம் எனத் தோன்றியது. புரிய வேண்டியவங்களுக்குப் புரியும் குமாரு” எனப் பதிவிட்டுள்ளார்.

ஒன்றுமே புரியவில்லை என ரசிகர்கள் குழப்பமடைந்து, செல்வராகவனை கிண்டல் செய்து வருகிறார்கள். சிலர் புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் ஆக இருக்கலாம் எனவும் கமெண்டுகளில் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT