செய்திகள்

குணா மறுவெளியீடாகுமா? கமல் பதில்!

குணா படத்தை மறுவெளியீடு செய்வது குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

DIN

பறவ பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ளது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம்.

இப்படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த பிப்.23 ஆம் தேதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மஞ்சுமெல் பாய்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை உலகளவில் ரூ.50 கோடிக்கு அதிகமாக வசூலித்த இப்படம் விரைவில் ரூ.100 கோடியை வசூலிக்க உள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதி, “மஞ்சுமெல் பாய்ஸ் படத்தைப் பார்த்துவிட்டு நானும் கமல்ஹாசனும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, நான் குணா படத்தை மறுவெளியீடு செய்யலாமா? என கமலிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘பார்க்கலாம்’ எனச் சொன்னார்” எனக் கூயுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT