சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டினை வெளியிட்டுள்ளார் இயக்குநர் கௌதம் மேனன்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ ரூ.85 கோடி வசூலித்தது.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா வெற்றிகளுக்குப் பிறகு 3-வது முறையாக இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருந்தார். ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சித்தார்த்தா நுனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கௌதம் மேனன், “விடிகே-2 படத்துக்கான கதை தயாராக இருக்கிறது. முதலில் சிம்பு இதில் வரவேண்டும். நடிகர் சிம்பு, தயாரிப்பாளர் வேல்ஸ் மீண்டும் இணையும்போது நிச்சயமாக அது நடக்கும். சிம்பு பெரிய படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் முடிந்தப்பிறகு நடக்கலாம்” எனக் கூறியுள்ளார்.
கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா இமைப்போல் காக்கா படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.