முகப்பு
செய்திகள்

தமிழகத்தைக் கலக்கும் மஞ்ஞுமல் பாய்ஸ்.. ஆச்சரியப்படுத்தும் வசூல்!

மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் தமிழக பாக்ஸ் ஆபிஸை கலக்கி வருகிறது.

Updated On : 5 மார்ச், 2024 at 12:13 PM
- DOTCOM
பகிர்:

பறவ பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ளது மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம்.

இப்படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மஞ்ஞுமல் பாய்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை உலகளவில் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம் விரைவில் ரூ.100 கோடியை வசூலிக்க உள்ளது.

இந்த நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுடன் 300 திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை அடைந்திருக்கிறது மஞ்ஞுமல் பாய்ஸ்.

ஏப்ரல் வரை பெரிய படங்கள் எதுவும் வெளியிட திட்டமிடப்படவில்லை என்பதால் தமிழகத்திலேயே இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.