DOTCOM
செய்திகள்

72 வயதிலும் குறையாத சுறுசுறுப்பு.. ஆச்சரியப்படுத்தும் மம்மூட்டியின் கண்ணூர் ஸ்குவாட் மேக்கிங்!

நடிகர் மம்மூட்டி நடித்த ‘கண்ணூர் ஸ்குவாட்’ திரைப்படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.

DIN

மலையாளத்தில் கடந்த ஆண்டு செப்.28 ஆம் தேதி வெளியான திரைப்படம் கண்ணூர் ஸ்குவாட்.

ராபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் கிரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது.

தமிழில் வெளியான கார்த்தியின் தீரன் படத்தைப் போன்றே குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வடமாநிலம் செல்லும் காவல்துறைக் குழுவைப் பற்றியது கண்ணூர் ஸ்குவாட். நிஜத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவியே இது உருவானது.

மம்மூட்டி கம்பெனி தயாரித்த இப்படம் ரூ.100 கோடியை வசூலித்து அசத்தியது. இது, ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான பின் அதிக கவனத்தைப் பெற்றது.

மம்மூட்டி கம்பெனி தயாரிப்பிலேயே அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற பெறுமையைப் பெற்றதால் நிஜ கண்ணூர் ஸ்குவாட் காவலர்களைச் சந்தித்து அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை மம்மூட்டி வழங்கினார்.

தற்போது, கண்ணூர் ஸ்குவாட் படத்தின் மேக்கிங் விடியோவைப் படக்குழு பகிர்ந்துள்ளது. 72 வயதிலும் மம்மூட்டி சுறுசுறுப்பாக இருப்பதும், சண்டைக்காட்சிகளில் நடிப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவியம்... நந்திதா ஸ்வேதா!

இரு நாயகிகள், ஒரு நாயகன் - பழைய கதையில் புதிய தொடர்!

ஓணம் ஸ்பெஷல்... நிவேதா தாமஸ்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிஜு ஜனதா தளம் புறக்கணிப்பு!

ஹூண்டாய் ரெய்டு: அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள்! - டிரம்ப்

SCROLL FOR NEXT