செய்திகள்

சிரஞ்சீவி, கீரவாணியுடன் நடிகை த்ரிஷா!

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் இருக்கும் புகைப்படத்தினை நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார்.

DIN

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் இருக்கும் புகைப்படத்தினை நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார்.

மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் தனக்கான இடத்தை தக்க வைத்தார்.

அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்துக்கு பிறகு சரியான திரைப்படம் அமையாமல் தவித்து வந்த த்ரிஷாவுக்கு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், லியோ திரைப்படங்களின் மூலம் மீண்டும் பார்முக்கு வந்துள்ளார் த்ரிஷா.

தற்போது, அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்திலும் கமலின் தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஷ்வம்பரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதிகமான விஎப்எக்ஸ் காட்சிகள் கொண்டுள்ளதால் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

தற்போது த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி, இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி உடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து, “உண்மையாக புனிதமான லெஜண்டரியான காலை” எனப் பதிவிட்டுள்ளார்.

ஆர்ஆர்ஆர் படத்துக்காக இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்த பாடல் ஆஸ்கர் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT