செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பிரபல செய்தி வாசிப்பாளர்!

நடிகை சரண்யா துராடி பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடரில் இணைந்துள்ளார்.

DIN

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரில் ஸ்டாலின், நிரோஷா நடித்து பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்கள். வி.ஜே. தங்கவேல் கந்தசாமி, வசந்த் வாசி, ஆகாஷ் பிரேம்குமார் ஆகியோர் மகன்களாக நடித்து வருகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் அண்ணன் - தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்டது. 5 ஆண்டுகள் வரை ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து தந்தை - மகன்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நடிகை சரண்யா துராடி பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடரில் இணைந்துள்ளார். இத்தொடரில் கண்மணி பாத்திரத்தில் சரண்யா நடிக்கிறார், சரவணன் பாத்திரத்தில் நடிக்கும் வி.ஜே.தங்கவேல் கந்தசாமிக்கு இவர் தான் ஜோடி என்று கூறப்படுகிறது.

சரண்யா துராடி இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து, ரன், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரன் தொடரிலும் இவர் நடித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார் சரண்யா துராடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT