செய்திகள்

பிறந்தநாளுக்காக பாலி தீவுக்குச் சென்ற எதிர்நீச்சல் நடிகை!

பிறந்தநாளையொட்டி பாலி தீவுக்கு நண்பர்களுடன் சென்றுள்ள புகைப்படங்களை மதுமிதா பகிர்ந்துள்ளார்.

DIN

எதிர்நீச்சல் தொடரின் நாயகி நடிகை மதுமிதா தனது பிறந்தநாளையொட்டி நண்பர்களுடன் பாலி தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.

பிறந்த நாளுக்கு சில நாள்களுக்கு முன்பே இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், நடிகை மதுமிதாவுக்கு அவரின் நண்பர்கள் கேக் வெட்டி முன்கூட்டியே பிறந்தநாளைக் கொண்டாடினர்.

தற்போது பிறந்தநாளையொட்டி மதுமிதாவை, இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு நண்பர்கள் அழைத்துச்சென்றுள்ளனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்னும் முதன்மை பாத்திரத்தில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார்.

தெலுங்கு மொழியில் நடித்த தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது தமிழ் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். தமிழிலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.

சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய மதுமிதா, அவ்வபோது நண்பர்களுடனும் சக கலைஞர்களுடனும் புகைப்படங்கள், விடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

இதனிடையே தற்போது பிறந்தநாளையொட்டி பாலி தீவுக்கு நண்பர்களுடன் சென்றுள்ள புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவருடன் புதுவசந்தம் தொடரில் நடித்துவரும் நடிகை வைஷ்ணவியும் சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு படகு சவாரி செய்வது போன்ற படங்களை அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தோனேஷியாவுக்கு பயணம் சென்றுள்ளதால், எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனுக்குத் தெரியாமல் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளதாகவும், படப்பிடிப்புக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளதாக ரசிகர்கள் கேலியாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் குவியும் பக்தர்கள்!

தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது விழுந்த கிரேன்! 22 பேர் பலி

ரூ. 50-ல் சென்னையைச் சுற்றிப் பார்க்க வேண்டுமா? சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!

பூக்களின் விலை உயர்வால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை: வியாபாரிகள் தகவல்

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 15,000 ஆக உயர்வு! - அன்பில் மகேஸ் அறிவிப்பு

SCROLL FOR NEXT