செய்திகள்

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

நடிகை சுனைனா நடிகர் நவீன் சந்திரா இணைந்து நடித்துள்ள இன்ஸ்பெக்டர் ரிஷி தொடர் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

DIN

நடிகை சுனைனா நடிகர் நவீன் சந்திரா இணைந்து நடித்துள்ள இன்ஸ்பெக்டர் ரிஷி தொடர் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ரெஜினா திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.

தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட் ஆகிய பல இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் நவீன் சந்திராவுடன் இன்ஸ்பெக்டர் ரிஷி எனும் தொடரில் நடித்துள்ளார்.

நந்தினி ஜே.எஸ். இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் தொடர் தமிழ்நாட்டின் ஒரு மலைக்கிராமத்தில் மர்மமான மரணங்களின் வலையில் சிக்கிக் கொள்கிறார் நாயகன நவீன் சந்திரா.

இதில் சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

மார்ச் 29 அன்று முதல் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் விடியோ உறுப்பினர்கள் இதைக் காணலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தத் தொடர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

நடிகர் நவீன் சந்திரா ஜிகர்தண்டா படத்தில் சிறப்பாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT