செய்திகள்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

நடிகர் அஜித் குமார் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

DIN

மார்க் ஆண்டனியின் பெரிய வெற்றிக்குப் பின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி படத்தை இயக்கவுள்ளார்.

விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்ததும் அஜித் இதில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த சில நாள்களில் குட் பேட் அக்லியின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், இரு படப்பிடிப்புகளில் அஜித் கலந்துகொள்வார் என்றே தெரிகிறது.

இந்த நிலையில், நடிகர் அஜித்தின் 53-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று பல்வேறு திரைப்பிரலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “என் சாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இந்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். அஜித் சாருடன் என் முதல் புகைப்படம். ரசிகனாக இருந்து இயக்குநர் வரை வந்திருப்பது வெளிப்படுத்த முடியாத உணர்வு. குட் பேட் அக்லிக்கு நன்றி சார்” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

SCROLL FOR NEXT