முகப்பு
செய்திகள்

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் ரிவால்வர் ரீட்டா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

Updated On : 2 மே, 2024 at 10:38 AM
பகிர்:

தி ரூட் மற்றும் தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'ரிவால்வர் ரீட்டா'.  கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடிக்கிறார்.

சென்னை 28, மாநாடு உள்பட பல வெற்றிப் படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றிய  சந்துரு இப்படத்தை எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே  சரஸ்வதி சபதம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

அனைத்து ரசிகர்களையும் கவரும் வித்தியாசமான கமர்ஷியல் படமாக  ரிவால்வர் ரீட்டா படத்தை உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கீர்த்தி சுரேஷ் அறித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →