செய்திகள்

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

நடிகர் விஜய் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் சில காட்சிகளை ஸ்டார் படத்தில் உருவாக்கியுள்ளேன்.

DIN

சின்னத்திரை தொடரான சரவணன் மீனாட்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான கவின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

இதனைத் தொடர்ந்து டாடா படத்தின் மூலம் சினிமாவில் கவின் பிரபலமடைந்தார். இதன் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக அதிதி எஸ். போஹன்கர் நடித்துள்ளார். வரும் மே 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த டிரைலரில் கவினின் உருவம் குறித்து கிண்டல் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது நடிகர் விஜய் தனது ஆரம்பக் காலகட்டத்தில் சந்தித்த விமர்சனம் போன்றே உள்ளதனெ இயக்குநரிடம் கேட்கப்பட்டது.

படத்தின் புரமோஷன் நேர்காணலில் இயக்குநர் இளன், “ஆமாம். படத்தின் முக்கியமான அந்தக் காட்சிகள் நடிகர் விஜய்யின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்கள் உத்வேகம் தந்தது.

1990களில் நடிகர் விஜய் மீது நிறத்தினை வைத்து விமர்சனம் எழுந்தது. இது நடிகர் விஜய்-க்கு மட்டுமல்ல இந்தத் திரைத்துறையில் பலருக்கும் நடந்திருக்கிறது. எனது தந்தைக்கும் (புகைப்பட கலைஞர் பாண்டியன்) இது நடந்திருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

இயக்குநர் இளனின் தந்தை நடிகரும் புகைப்பட கலைஞருமான பாண்டியன் ராஜா ராணி படத்தில் நடித்து கவனம் பெற்றவர். பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இபிஎஸ்

அமெரிக்க வரி ஏதிரொலி: நிவாரணம் நாடும் ரத்தின மற்றும் நகை ஏற்றுமதியாளர்கள்!

மிடுக்கு... அஸ்வதி!

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணி: ஆஸி. அரசு கண்டனம்!

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார்: பிரேமலதா விஜயகாந்த்

SCROLL FOR NEXT