முகப்பு
செய்திகள்

கமல்ஹாசன் பொறாமைப்படும் விஷயம் எது?

தக் லைஃப் படப்பிடிப்புக்காக தில்லி சென்றுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

Updated On : 9 மே, 2024 at 7:40 AM
கமல்ஹாசன்
பகிர்:

நடிகர் கமல்ஹாசன் இன்று காலை வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகின்றது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், த்ரிஷா கலந்துகொண்டனர்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக கமல்ஹாசன் வாக்கு சேகரித்த நிலையில், வாக்குப்பதிவு முடிந்தவுடன் தில்லியில் நடைபெறும் 3-ஆம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

இதற்கிடையே, படப்பிடிப்புக்கு மத்தியில் அவ்வப்போது வெளியே செல்லும் கமல்ஹாசன், அதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

கடந்த 3 நாள்களுக்கு முன்னதாக, நூலகத்துக்கு சென்ற கமல்ஹாசன் சில புத்தகங்களை படிப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை மேஜையின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, “மேஜை செய்யும் பணியை கண்டு நான் பொறாமைப்படுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை, மேஜையை வடிவமைத்த கலைஞருக்கு சல்யூட்” எனத் தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.