செய்திகள்

‘குற்றம் கடிதல் 2’ திரைப்படம் அறிவிப்பு!

தேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் தயாரிப்பாளர் ‘குற்றம் கடிதல் 2’ படத்தினை அறிவித்துள்ளார்.

DIN

2015ஆம் ஆண்டு வெளியாகி தேசிய விருது பெற்ற திரைப்படம்தான் குற்றம் கடிதல். இதனை எழுதி இயக்கியவர் பிரம்மா. இந்தப் படத்தினை ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் தாயாரித்திருந்தது. ராதிகா பிரசித்தா பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இதன் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் இதை இயக்குநர் பிரம்மா இயக்கப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கதை எழுதி இயக்குகிறார் எஸ்.கே. ஜீவா. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

மற்ற படக்குழு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென படக்குழு தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

குற்றம் கடிதலை இயக்கிய பிரம்மா நடிகை ஜோதிகாவை வைத்து மகளிர் மட்டும் திரைப்படத்தை எடுத்தார். அந்தப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றன. பின்னர் அவர் இயக்கிய சுழல் இணையத்தொடர் மிகப் பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேப்பூா் அருகே சாலை விபத்து: நூலிழையில் தப்பிய புதுமண தம்பதி

புனித டேவிட் கோட்டை புதுப்பிக்க நடவடிக்கை: கடலூா் ஆட்சியா் உறுதி

சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில்களின் நடை அடைப்பு!

இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்

உள்ளாட்சி ஊழியா்கள் செப். 8 முதல் பணிக்குத் திரும்ப முடிவு

SCROLL FOR NEXT