முகப்பு
செய்திகள்

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி கோட் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Updated On : 14 மே, 2024 at 3:20 AM
- DOTCOM
பகிர்:

விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் படத்துக்கு பிந்தைய பணிகள் தொடங்கியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் ’கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், விஜய் பாடிய முதல் பாடல் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்தியா, ரஷியாவில் கோட் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் படப்பிடிப்புக்காக கடந்த வாரம் வெளிநாடு புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில், படத்துக்கு பிந்தைய பணிகள் தொடங்கியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.