செய்திகள்

சாதியைக் குறிப்பிட்டு இழிவான பேச்சு..? சர்ச்சையில் கார்த்திக் குமார்!

நடிகர் கார்த்திக் குமார் சாதி குறித்து இழிவாகப் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

DIN

நடிகை சுசித்ராவின் நேர்காணலொன்று திங்கள்கிழமை வெளியானது. அதில், தன் முன்னாள் கணவரும் நடிகருமான கார்த்திக் குமார் குறித்த பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது, நடிகர் தனுஷும் கார்த்திக் குமாரும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் எனக் கூறினார்.

தொடர்ந்து, இந்த நேர்காணலைக் கண்டு அதிர்ச்சியடைந்த தனுஷ் ரசிகர்கள் சுசித்ராவைக் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர். முக்கியமாக, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

அதேநேரம், சுசித்ரா கூறியதில் உண்மை இருக்கலாம் என்கிற ரீதியில் பலரும் தனுஷ் மற்றும் கார்த்திக் குமாரைக் கிண்டலடித்து வருவதுடன் இருவரையும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இப்பிரச்னை தொடர்பான இன்னொரு நேர்காணலில் ஒரு புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

அதில், கார்த்திக் குமார் தன் முன்னாள் மனைவி சுசித்ராவைக் கேள்விகேட்கும்போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவாகவும் குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்திப் பேசியதாகக் கூறுகின்றனர். இதைப் பேசியது கார்த்திக்தான் என நேர்காணலில் பேசியவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆடியோ வைரலாகி வருகிறது. இந்தப் பேச்சைக் கண்டு ஆத்திரமடைந்த பலரும், கார்த்திக் குமாரைக் கடுமையாக கண்டித்துள்ளனர். மேலும், இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், தற்போது கார்த்திக் குமார் இன்ஸ்டாகிராமில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது என் குரலும் வார்த்தைகளும் அல்ல. நான் இப்படியெல்லாம் பேசமாட்டேன்.” என ஆடியோவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT