செய்திகள்

‘டியூன் 2’ ஓடிடியில் எப்போது?

டெனிஸ் வில்லினுவ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற டியூன் -2 படத்தின் ஓடிடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DIN

டெனிஸ் வில்லினுவ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகியுள்ள டியூன் இரண்டாம் பாகம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

பூமியில் எப்படி பெட்ரோலியமும், டீசலும் முதன்மை எரிபொருளாக உள்ளதோ, அதைப் போன்று "ஸ்பைஸ்" (Spice) எனும் எரிபொருள் அராக்கிஸ் (Arrakis) எனும் கோளில் கிடைக்கிறது.

பால்வெளியில் உள்ள மற்ற கோள்கள் அனைத்தும், இந்த எரிபொருளை உற்பத்தி செய்ய, அராக்கிஸ் கோளில் வாழும் மக்களின் நிலங்களைப் பறித்து, அவர்களை அடிமையாக்குகிறார்கள். இதனால் அங்குள்ள பூர்வகுடிகள் தங்கள் நிலத்தை இந்த ஆளும் வர்க்கத்திடமிருந்து மீட்கப் போராளிகளாகின்றனர்.

நிலத்தின் நிர்வாக உரிமை யாருக்குக் கிடைத்தது? ஹீரோவை ஏன் அந்த அடிமைகள் ‘கடவுள் தேர்ந்தெடுத்தவனாகக்’ கருதுகிறார்கள் என்பதே டியூன் படவரிசைகளின் (Dune Franchise) கதைக்களம்.

டியூன் 2 திரைப்படத்தில் டிமத்தி சார்லமேட், சென்டாயா, பட்டிஸ்டா, ஜாவீர் பார்டென், ரெபேக்கா ஃபெர்குசான் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியாகி 500 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4100 கோடி) வசூலித்து அசத்தியது. இந்தப் படம் வரும் மே.21ஆம் நாள் மேக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஜியோ சினிமாஸில் வெளியாகுமெனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலகிரியில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

திருச்சியில் டிசம்பரில் கள் விடுதலை, மதுவிலக்கு மாநாடு செ.நல்லசாமி

சாலை விபத்து: சமையலா் உயிரிழப்பு

நாளைய மின்தடை: நீடூா்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியா்

SCROLL FOR NEXT