முகப்பு
செய்திகள்

பாபி தியோலுடன் நடிக்கும் சான்யா மல்ஹோத்ரா!

நடிகை சான்யா மல்யோத்ரா பாபி தியோலுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 16 மே, 2024 at 12:40 PM
பகிர்:

ஆமிர்கானின் தங்கல் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சான்யா மல்ஹோத்ரா. பின்னர் இவர் நடித்த பாதாய் ஹோ, போட்டாகிராபி, லூடோ, காதல் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று தந்தன. 

அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படத்திலும் சான்யா மல்ஹோத்ரா நடித்திருந்தார். இவரது கதைத்தேர்வுகள் எப்போதும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும். 

தமிழில் மீனாட்சி சுந்தரேஷ்வர் என்ற படம் நெட்பிளிக்ஸில் வெளியானது. இதில் தமிழ்ப் பெண்ணாக நடித்திருப்பார். மிகவும் அழகான கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. 

Advertisement

32 வயதான சான்யா மல்ஹோத்ரா அட்லி தயாரிக்கும் பேபி ஜான் படத்திலும் மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் அனிமல் படத்தில் கவனம் ஈர்த்த பாபி தியோலுடன் நடித்து வருகிறார்.

உண்மைக் கதையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்படுகிறது. மும்பையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படக்குழு இது குறித்து தகவலை ரகசியமாக வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி திரைப்படம் திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது. திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments