முகப்பு
செய்திகள்

குட் பேட் அக்லி அப்டேட்!

நடிகர் அஜித் குமார் நடிக்கவுள்ள குட் பேட் அக்லி படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 19 மே, 2024 at 1:12 PM
பகிர்:

துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்துள்ளார். விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்திற்கு, ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிட்டுள்ளனர். இதில், நடிகர் அஜித்துக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஹைதராபாத்தில் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் அஜித்தின் மூன்று தோற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால், இப்படத்தில் அஜித் 3 வேடங்களில் நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும், இப்படத்தை 2025 பொங்கல் அன்று வெளியிட உள்ளதையும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →