எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் நடிகை ஸீபா ஷெரினின் பிறந்தநாளை புதுவசந்தம் தொடரின் நடிகை வைஷ்ணவி கொண்டாடியுள்ளார்.
அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவருக்கு நெருங்கிய நண்பர்களை அழைத்து பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கொண்டடியுள்ளார். இது தொடர்பான விடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்திலும் வைஷணவி பகிர்ந்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் துணை பாத்திரத்தில் நடித்துவருபவர் நடிகை ஸீபா ஷெரின். இஸ்லாமியரான இவர் தொடரிலும் ஹிஜாப் அணிந்தவாறே நடிக்கிறார். அவரின் பாத்திரமும் அந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக பலதரப்பினரால் பாராட்டப்பட்டவர் ஸீபா. சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய இவர், சொந்தமாகவும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், ஸீபா ஷெரினின் பிறந்தநாளை அவரின் நண்பர்கள் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். புதுவசந்தம் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை வைஷ்ணவி. இவர் எதிர்நீச்சல் நாயகி மதுமிதாவுக்கு நெருங்கிய நண்பர். சமீபத்தில் இவர்கள் இணைந்து பாலி தீவுக்கு சென்றிருந்தனர்.
இதேபோன்று நடிகை ஸீபா ஷெரினுக்கும் தோழியான வைஷ்ணவி, அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். ( சன் தொலைக்காட்சியின் புதுவசந்தம் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷ்ணவி.)
இது தொடர்பாக விடியோவை பதிவிட்டுள்ள அவர், ''எல்லா ஹிந்துவுக்கும் இருக்கும் ஒரு கட்டாய முஸ்லீம் தோழி. எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத பெண் தோழிகளில் ஒருவளுடனான நட்பை நான் உருவாக்கியுள்ளேன். நீ எப்போதும் என்னை மதிப்பிடுவது கிடையாது. நான் எதுவான இருக்கிறேனோ அதற்காக என்னுடன் இருப்பவள் நீ. நான் சில சமயங்கள் கடுமையாக நடந்துகொண்டதுண்டு. ஆனால், ஒருபோதும் நீ என்னிடம் அப்படி இருந்ததில்லை. நீ எனக்கு கிடைத்த உண்மையான ஆசிர்வாதம். உன் எல்லா வெற்றிகளையும் நீ சாத்தியப்படுத்துவாய். உன்னில் என்னை காண்கிறேன். போரிடுவதற்காகவே பிறந்தவர்கள் நாம்'' என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
இந்த விடியோவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை மதுமிதாவின் பிறந்தநாளுக்கும் இதேபோன்று இன்ப அதிர்ச்சி கொடுத்து மகிழ்ந்தவர் வைஷ்ணவி என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.