செய்திகள்

மறுவெளியீடாகும் படையப்பா!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் மறுவெளியீடாக உள்ளதாகத் தகவல்.

DIN

90களில் பாட்ஷா, அண்ணாமலை படங்கள் பெற்ற வெற்றிகளையும் அதனால் உச்சிக்குச் சென்ற ரஜினியின் புகழையும் கட்டிக்காத்த மற்றொரு ரஜினி படம் - படையப்பா. வெற்றி என்றால் அப்படியொரு வெற்றி. 1999 கோடைக்காலத்தில் படையப்பாவைக் கண்டுகளிக்காத தமிழ் சினிமா ரசிகரே இருந்திருக்க முடியாது என்கிற அளவுக்கு திரையரங்குகளில் ஏப்ரல், மே முழுக்க கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து ரசித்தார்கள். இந்தளவுக்கு இளைஞர்கள், தாய்மார்கள் என அனைவரையும் கவர்ந்த இன்னொரு ரஜினி படம் அதற்குப் பிறகு வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

வாயில் மவுத் ஆர்கன், கையில் காப்பு என படத்தின் முதல் பாதியில் துறுதுறுவென இருப்பார் ரஜினி. இளைஞர்களுக்குப் பிடித்தது போல இருக்கவேண்டும் என்பதால் முதல் பாதியில் உடை, ஸ்டைல் எல்லாம் அதற்கேற்றாற்போல இருக்கும்.

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் பஞ்ச்லைன்களை எழுதும் பொறுப்பையும் அவரே எடுத்துக்கொண்டார். போடா, ஆண்டவனே நம்ம பக்கம்தான் இருக்கான், அதிகமா ஆசைப்படற ஆம்பளையும் அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை என்கிற வசனங்களை எழுதியவர் ரஜினிதான்.

கடந்த காலங்களில் வெற்றிபெற்ற திரைப்படங்களை மறுவெளியீடு செய்யும் டிரெண்ட்டில் கில்லி, பில்லா உள்ளிட்ட பல படங்கள் மறுவெளியீடாகின. இதில், கில்லி திரைப்படம் மறுவெளியீட்டிலும் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது.

இந்த நிலையில், படையப்பா திரைப்படத்தையும் மறுவெளியீடு செய்ய அப்படத்தின் தயாரிப்பாளரான தேனப்பன் முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக நடிகர் ரஜினிகாந்த்திடம் ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், படையப்பா மீண்டும் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

SCROLL FOR NEXT