முகப்பு
செய்திகள்

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

துரந்தர், டாக்ஸிக் படங்கள் குறித்த 10 உண்மைகளைப் பதிவிட்டுள்ள இயக்குநர் ராம் கோபால் வர்மா குறித்து...

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 4:56 PM
துரந்தர் 2, டாக்ஸிக் படத்தின் காட்சிகள் - படங்கள்: யூடியூப் / ஜியோ ஸ்டூடியோஸ், கேவிஎன் புரடக்‌ஷன்ஸ்.
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 4:03 PM

இயக்குநர் ராம் கோபால் வர்மா துரந்தர், டாக்ஸிக் படங்கள் தனக்கு தாவீது, கோலியாத்தை ஞாபகப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

ஆதித்யா தார் இயக்கிய துரந்தர் படத்துக்கு தனது ஆதரவை தெரிவித்து, ராம் கோபால் வர்மா மிகப்பெரிய பதிவினைப் பதிவிட்டுள்ளார்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 4:10 PM

துரந்தருக்கு ஆதரவளிக்கும் ராம் கோபால் வர்மா

Advertisement

ஆதித்யா தார் இயக்கிய துரந்தர் படம் உலகம் முழுவதும் ரூ.1300 கோடி வசூலித்து அசத்தியது. இதில் ரன்வீர் சிங், மாதவன், அக்‌ஷய் கண்ணா நடித்துள்ளார்கள். இதன் இரண்டாம் பாகம் வரும் மார்ச்.19ஆம் தேதி வெளியாகிறது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் படம் முதல்முறையாக மார்ச்.19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படங்களில் எது வெற்றியடையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துவரும் நிலையில், இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் பக்கத்தில் 10 உண்மைகள் என தனது கருத்தை அதிரடியாக முன்வைத்துள்ளார். அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 4:10 PM

துராக்ஸிக் - தாவீது, கோலியாத்...

துராக்ஸிக் (துரந்தர் + டாக்ஸிக்) பார்க். இல்லை, மார்ச் 19ல் வெளியாகும் இரண்டு பெரிய படங்கள் பற்றி நான் பேசவில்லை. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத ஒன்றை நாம் அனுபவிக்கப் போகிறோம்.

இது தாவீது, கோலியாதுக்கும் இடையிலான போட்டி. கோலியாத்தான கேஜிஎஃப் 2 படத்தின் வசூல் திடீரென தாவீது துரந்தரின் கோலியாத் வசூலுக்கு முன்பாக சிறியதாக தெரிகிறது.

தற்போது கோலியாத் துரந்தர் 2, புதிய தாவீது டாக்ஸிக் படத்துக்கும் போட்டி. துராக்ஸிக் வடக்கு - தெற்கு மற்றும் பாலிவுட் - சேன்டல்வுட்டுக்கு எதிரான போட்டி இல்லை என வலூவாக நம்புகிறேன்.

உண்மையில் இது இரண்டு காலாசாரத்துக்கான சண்டை. இரண்டு நிலப்பரப்புகளுக்கானது அல்ல, சினிமாவுக்கானது என நினைக்கிறேன். துரந்தர் பார்வையாளர்களின் அறிவை மதிக்கிறது. டாக்ஸிக் பார்வையாளர்களின் முட்டாள்தனத்தை எடுத்துக்கொள்கிறது.

கேஜிஎஃப் 2 படம் பெருங்கூட்டத்துக்கு இடையே முட்டாள்தனத்தையும் துரந்தர் பெருங்கூட்டத்துக்கு இடையே அறிவையும் இலக்காக்கியது.

ரூ.130 கோடியில் உருவான துரந்தர் (இரண்டு பாகத்துக்கும் ரூ.260 கோடி) ஒரு தாவீது படம். பார்வையாளர்களிடம் புத்திசாலிதனத்தைக் கேட்கிறது. படம் வெளியானதும் பார்வையாளர்களும் அந்தப் படத்தின் புத்திசாலிதனத்தைக் கவனித்து பாராட்டினார்கள்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 4:27 PM

ஏன் துரந்தர் நல்ல படம் என்பதற்கான 10 உண்மைகள்

1. மூளையே இல்லாத கதாநாயக வழிபாடு vs கதையில் ஒருவனது செயல்பாடுகள் மூலமாக நாயகனைக் கண்டறிவது.

2. நியூட்டனின் புவீஈர்ப்பு விசையை அவதிக்கும் வகையில் சண்டைக் காட்சிகள் vs துரந்தர் படத்தில் வருவதுபோல நிஜமானது போன்ற சண்டைக் காட்சிகள்.

3. “விசில் அடி, கைத்தட்டுங்கள் மூடர்களே” என்பது போல வரும் ஒவ்வொரு 5 நிமிஷத்திற்கும் வரும் பின்னணி இசைக்கும் vs அமைதியான பின்னணியில் நடிப்பைப் பாருங்கள் என்பதற்குமான வித்தியாசம்.

4. ரூ.400 கோடி செலவளித்து ஒருவனை வெல்ல முடியாத கடவுளாகக் காட்டுதல் vs துரந்தர் போல ரூ.130 கோடி செலவு செய்து அனைவரையும் மனிதராகக் காண்பிப்பது.

5. பார்வையாளர்களை மூடர்களாக நினைத்து படம் எடுப்பது vs சிக்கலான கதையை எடுத்து, அவரவர் பார்வையில் கருத்துகளை எடுத்துக்கொள்ள விடுவது. காது கிழியும் பின்னணி இசையால் கருத்தைத் திணிப்பது அல்ல.

6. அல்ட்ரா ஸ்லோமோஷன் உடன் நாயகன் அறிமுகம் vs திட்டமிட்ட புத்திசாலித்தனம் பார்வையாளர்களுக்கு சவால் அளிக்கும்.

7. மாஸ் ஹீரோக்களுக்கான வழிபாட்டை ஒழித்தல் vs மாஸ் ஒழிந்திருக்கும் மூளையை வெளிக்கொணர்தல்.

8. கலைப்படைப்பில்லாத மிகப்பெரிய பட்ஜெட் விஎஃப்எக்ஸ் காட்சிகளும் vs துரந்தரில் பயன்பட்டிருக்கும் ஒவ்வொரு ரூபாய்க்குமான உழைப்பு மனதை விட்டு எப்போதும் நீங்காது.

9. மூளையை மறந்து படத்தை மகிழ்ந்து பார்த்தல் vs படத்தைப் பற்றி சிந்திக்க தூண்டுதல்.

10. ஒவ்வொரு பிரேமிலும் கொட்டி இருக்கும் பணத்துக்கான மதிப்பும் vs ஒவ்வொரு பிரேமிலும் பணத்தைப் பயன்படுத்தி இருப்பதற்கான வித்தியாசம்.

இதெல்லாம் ஆதித்யா தார் மீதான அன்பில் எழுதவில்லை, இந்திய சினிமா மீதான் நம்பிக்கையினால் எழுதுகிறேன். மார்ச் 19ஆம் தேதிக்காக காத்திருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

summary

Durandhar - Toxic films and David - Goliath..! 10 facts about Ram Gopal Varma!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.