முகப்பு
செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 10 - 16)

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

Updated On : 9 ஜூலை 2026, 6:46 pm IST
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! - சித்திரிப்பு / விஜய்
பகிர்:

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

பல்டி

நடிகர்கள் ஷேன் நிகம், சாந்தனு நடிப்பில் உருவான பல்டி திரைப்படம், நாளை (ஜூலை 10) சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

உன்னி சிவலிங்கம் இயக்கிய இப்படம் கபடியை மையமாக வைத்து உருவாகியிருந்தது. நடிகர் சாந்தனு இரண்டாம் நாயகனாகவும் கேங்ஸ்டர் கதாபாத்திரங்களில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், செல்வராகவன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

Advertisement

Advertisement

பரிமளா அண்ட் கோ

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான பரிமளா அண்ட் கோ படத்தில் நடிகர்கள் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங் கீதம்

இயக்குநர் சிங்கீதம் சினீவாச ராவ் இயக்கிய சிங் கீதம் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதில், முன்னணி நடிகர்களாக அயான், அஹில்யா, ஷாலினி ஆகியோர் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

பெத்தி

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நாயகனாக நடித்து வெளியான தெலுங்கு திரைப்படம் பெத்தி. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்திருந்தார்.

இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

சாருகேசி

சாருகேசி படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன், சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி, தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, சாய் தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அருண். ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

ட்ரிகலா

ஷ்ரத்தா தாஸ், மாஸ்டர் மகேந்திரன் மற்றும் அஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ட்ரிகலா திரைப்படம், மர்மம் கலந்த த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் நாளை காணலாம்.

லேண்ட் ஆப் ஃபுட்பால்

கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இணையத் தொடர் லேண்ட் ஆப் ஃபுட்பால் (Land Of Football).

இந்தத் தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கடந்த வார ஓடிடி (இசகப்பட்டணம்)

தெலுங்கு இயக்குநர் கேரி பி.எச். இயக்கத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இணையத் தொடர் இசகப்பட்டணம்.

இந்தத் தொடர், அமேசான் பிரைம் தளத்தில் காணக் கிடைக்கிறது.

சூப்பர் சுப்பு

நடிகர் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர், முரளி சர்மா ஆகியோர் நடிப்பில் பதின்ம வயதோருக்கான நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ள இணையத் தொடர் சூப்பர் சுப்பு.

இந்தத் தொடரை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

மோலிவுட் டைம்ஸ்

மலையாள இயக்குநர் அபினவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லென், சங்கீத் பிரதாப், சுஜித்ராஜ் வி, ஷரப் யு தீன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நகைச்சுவை பாணியில் வெளியான திரைப்படம் மோலிவுட் டைம்ஸ்.

சிறந்த இயக்குநராக வேண்டும் என ஆசைப்படும் இளைஞரின் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் காணக் கிடைக்கிறது.

summary

Let’s take a look at which movies and web series are set to release on OTT platforms this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments