நடிகரும் தொகுப்பாளருமான அஸார் பெண் வேடமிட்டு பதிவுட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
சன் தொலைக்காட்சியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருபவர் அஸார். அதோடு மட்டுமின்றி சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்குகிறார்.
அவ்வபோது யூடியூப் தொடர்களிலும், சின்னத்திரையிலும் தனது நடிப்பு திறமையையும் வெளிக்காட்டி வருகிறார்.
சமூகவலைதளத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய அஸார், தான் நேர்காணல் எடுக்கும் நடிகைகளுடன் புகைப்படங்களைப் பதிவிடுவது வழக்கம்.
படங்களில் தோன்றிய புகழ்பெற்ற கதாபாத்திரங்களைப் போன்று வேடமிட்டு அந்த பாத்திரங்களை மறுஉருவாக்கம் செய்யும் வகையில் வேடமிட்டு புகைப்படங்களை எடுத்துப் பதிவிடுவார்.
அந்தவகையில் தற்போது பெண் வேடமிட்டு சில புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளார். மார்டனாக உடை அணிந்து, மேக்கப் போட்டுக்கொண்டு மிடுக்கான பெண்ணைப் போன்று நலினத்துடன் போட்டுக்கு போஸ் கொடுத்துள்ளார். இப்படங்கள் திரைப்பட நாயகிகளின் அளவுக்கு கவர்ச்சியாகவும் உள்ளதாக ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதேபோன்று புடவை அணிந்து, ஆபரணங்கள் - மேக்கப் உடன் திருமணக் கோலத்தில் உள்ள பெண்ணைப் போன்றும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
நகைக்கடை விளம்பரங்களில் தோன்றும் நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு, அஸாரின் பெண் வேடம் இருப்பதாகவும், அவரின் அர்ப்பணிப்பு இதில் தெரிவதாகவும் பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.