ராயன் படத்தின் முக்கிய அறிவிப்பு!
ராயன் படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
செய்திகள்ராயன் படத்தின் முக்கிய அறிவிப்பு!
ராயன் படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் தனுஷ் தனது 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு 'ராயன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் ஜூன் - 13 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ராயன் படத்தின் இரண்டாவது பாடல் நாளை மறுநாள் (மே 24) வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
முன்னதாக இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.