மெட்ரோ பட இயக்குநருடன் இணையும் பாபி சிம்ஹா!
மெட்ரோ பட இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் பாபி சிம்ஹா இணைந்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹாவுக்கு பெற்றுத் தந்தது.
இதனைத் தொடர்ந்து, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், மகான், சாமி 2, பேட்டா உள்ளிட படங்களில் பாபி சிம்ஹா நடித்தார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் பாபி சிம்ஹா, மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்துக்கு நான் வயலன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், இப்படத்தில் யோகிபாபு, மெட்ரோ ஷிரிஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏ.கே. பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்நிலையில், நான் வயலன்ஸ் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.