முகப்பு
செய்திகள்

தக் லைஃப் - ரசிகர்களைச் சந்தித்த சிம்பு!

நடிகர் சிம்பு தக் லைஃப் படப்பிடிப்பில் ரசிகர்களைச் சந்தித்த விடியோ வெளியாகியுள்ளது.

Updated On : 27 மே, 2024 at 9:28 AM
பகிர்:

தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, செர்பியா, மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.

நடிகர் துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து விலகியதும் அவருக்குப் பதிலாக நடிகர் சிம்பு இணைந்தார்.

அதேநேரம், நடிகர் ஜெயம் ரவியும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், இறுதியில் அவரும் வெளியேறியதால், ஜெயம் ரவியின் கதாபாத்திரத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிக்கிறார்.

Advertisement

முன்னதாக, இப்படத்தில் நடிகர் சிம்பு இணைந்த விடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்த நிலையில், தக் லைஃப் படப்பிடிப்பின்போது நடிகர் சிம்பு ரசிகர்களைச் சந்தித்த விடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments