சொந்த கிராமத்தில் நடிகை மதுமிதா 
செய்திகள்

பாலி தீவு அல்ல... சொந்த கிராமத்துக்குச் சென்ற எதிர்நீச்சல் நாயகி!

தெலுங்கு மொழியில் மிகுந்த பிரபலமான மதுமிதா, தற்போது தமிழ் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

DIN

எதிர்நீச்சல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மதுமிதா தனது குடும்பத்துடன் சொந்த கிராமத்துக்குச் சென்றுள்ளார்.

குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களுடனும் நேரத்தை செலவிடுவதற்காக கிராமத்துக்குச் செல்லும் திட்டத்தை அவர் செயல்படுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் விடியோக்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பாக பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக நண்பர்களுடன் பாலி தீவுக்கு அவர் சென்றிருந்தார். நண்பர்களுடன் செல்லும்போது தீவுகளுக்கு - குடும்பத்துடன் செல்லும்போதும் மட்டும் கிராமத்துக்கு செல்வதாக ரசிகர்கள் சிலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பாலி தீவில் நண்பர்களுடன் மதுமிதா

கிராமத்தில் நேரம் செலவிட முயற்சிகள் எடுத்து, அதை செயல்படுத்தும் மதுமிதாவின் முயற்சிகளுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் நடிகை மதுமிதா நாயகியாக நடித்து வருகிறார்.

தெலுங்கு மொழியில் நடித்த தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது தமிழ் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். தமிழிலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.

சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய மதுமிதா, அவ்வபோது நண்பர்களுடனும் சக கலைஞர்களுடனும் புகைப்படங்கள், விடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

கிராமத்தில் மதுமிதா

அந்தவகையில் கிராமத்தில் தனது பெற்றோர், உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் விடியோக்களையும் மதுமிதா பகிர்ந்துள்ளார். நகரத்து வாழ்க்கையிலிருந்து... அழகான சொந்த கிராமத்துக்கு தப்பித்து வந்துவிட்டதாக கேலியுடன் பகிர்ந்துள்ளார். என்னதான் நகரத்தில் செல்வ செழிப்புடன் இருந்தாலும், கிராமத்து வாழ்க்கையே சிறந்தது எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

மதுமிதா / மதுமிதாவின் தந்தை

இதனிடையே நண்பர்களுடன் பாலி தீவில் உல்லாசமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், தற்போது கிராமத்தில் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ஒப்பிட்டு ரசிகர்கள் பல்வேறுவிதமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT