செய்திகள்

கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினி வழிபாடு!

கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் இன்று(மே 31) சாமி தரிசனம் செய்தார்.

வேட்டையன் படப்பிடிப்பை முடித்து ஓய்வில் இருக்கும் ரஜினி, கூலி படப்பிடிப்பிற்குத் தயாராகி வருகிறார்.

கடந்த மே 29-ல் சென்னையிலிருந்து இமயமலைக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி, “ஒவ்வொரு ஆண்டும் இமயமலை செல்கிறேன். இந்த முறையும் பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகைக்குச் செல்கிறேன்” என செய்தியாளர்களுடன் பேசும் போது தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த ஆண்டுதோறும் கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார்.

தற்போது, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT