அமரன் படக் குழுவுக்கு சிவக்குமார், சூர்யா பாராட்டு x
செய்திகள்

அமரன் படக் குழுவுக்கு சிவக்குமார், சூர்யா பாராட்டு!

அமரன் திரைப்படத்தை நடிகர் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா பார்த்தனர்.

DIN

அமரன் திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.

மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட அமரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

கமல்ஹாசன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் அமரன் திரைப்படத்தை பார்த்த பின், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பாராட்டினர்.

இதுகுறித்து ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவில்,

“பழம்பெரும் நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் அமரன் திரைப்படத்தை பார்த்து பாராட்டியதற்கு நன்றி.

தைரியம் மற்றும் அன்பின் கதையை நாங்கள் பகிர்ந்து கொள்ளும்போது, உங்களின் ஊக்கம் மேலும் உத்வேகம் அளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளனர்.

இதனிடையே, உலகளவில் அமரன் திரைப்படம் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோடியக்கரையில் பலத்தக் காற்று

புதுவையில் அரசுப் பணியாளா்கள் நியமன முறையில் நிலவும் சிக்கல்களை களைய வேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம்

அண்ணாமலையாா் கோயிலில் திருக்கல்யாணம்

காரைக்காலில் சுற்றுலா தின விழா நடத்துவது குறித்து ஆலோசனை

உரக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து; பொதுமக்கள் பாதிப்பு

SCROLL FOR NEXT