செய்திகள்

விடாமுயற்சி அப்டேட் எங்கே? தயாரிப்பாளரை சாடும் அஜித் ரசிகர்கள்!

விடாமுயற்சி அப்டேட் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம்...

DIN

நடிகர் அஜித் குமார் ரசிகர்கள் லைகா நிறுவனத்தைக் கடுமையாக சாடி வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ்திருமேனியுடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இவருடன் அர்ஜூன், ஆரவ், திரிஷா, ரெஜினா கெஸான்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று வரை படத்தின் டீசர் கூட வெளியாகவில்லை.

இதனால், அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முக்கியமாக, விடாமுயற்சி டீசர் நவ.10 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவித்திருந்தன. ஆனால், அதற்கான எந்த அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் தரவில்லை.

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்‌ஷன் மற்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரனை அஜித் ரசிகர்கள் கடுமையாக தாக்கி வருகின்றனர். இந்தியளவில் வொர்ஸ்ட் புரடக்‌ஷன் ஹவுஸ் லைகா (worst production house lyca) என்கிற ஹேஷ்டேக் டிரண்டாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

1068 எபிசோடுகளுடன் முடிவடைந்த மாரி தொடர்!

தஞ்சை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT