நயன்தாரா 
செய்திகள்

40-வது வயதில் நயன்தாரா!

இன்று நயன்தாராவின் பிறந்த நாள்.

DIN

நடிகை நயன்தாரா இன்று தன் 40-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் ரூ.1140 கோடி வசூலித்தது. 

இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த இறைவனும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அன்னபூரணி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதற்கிடையே, இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு வாடகைத்தாய் மூலம் 2 ஆண் குழந்தைகளுக்கும் தாயாக இருக்கிறார். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காகவே அதிகமான படங்களைத் தேர்ந்தெடுப்பதில்லை.

தற்போது, மண்ணாங்கட்டி மற்றும் ராக்காயி ஆகிய படங்கள் நயன் நடிப்பில் உருவாகி வருகின்றன. இன்று நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) எனப் பெயரிடப்பட்ட நயன்தாராவின் திருமண ஆவணப்படம் வெளியாகியுள்ளது.

இந்த ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் மேல் குற்றச்சாட்டுகளையும் வைத்திருக்கிறார். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இருப்பினும் மனசினக்கரே என்கிற மலையாளப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நயன்தாரா, இன்று தன் தன்னுடைய 40-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதால் ரசிகர்கள் நயன்தாராவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

2005 ஆம் ஆண்டு ஐயா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியானார். தொடர்ந்து, ஏற்றமும் இறக்கமுமாக சென்ற தன் சினிமா வாழ்க்கையில் இன்று தென்னிந்தியளவில் ’லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படுகிறார்.

சினிமா மட்டுமல்லாது பெண்களுக்கான அலங்கார பொருள்களை விற்கும் நிறுவனம் உள்பட சில தொழில்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்

பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்: பகவந்த் மான்

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான்

SCROLL FOR NEXT