ஷாருக்கான் மகனின் இணையத் தொடருக்கு இசையமைக்கும் அனிருத் 
செய்திகள்

ஷாருக்கான் மகனின் இணையத் தொடருக்கு இசையமைக்கும் அனிருத்!

ஷாருக்கான் மகன் இயக்கும் இணையத் தொடருக்கு இசையமைக்கும் அனிருத்.

DIN

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இயக்கும் இணையத் தொடருக்கு அனிருத் ரவிசந்தர் இசையமைக்கவுள்ளார்.

நாயகராக அறிமுகமாகுவர் என நினைத்திருந்த ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், இணையத் தொடரை இயக்கவுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியானது.

ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக கௌரி கான் தயாரிப்பில் ஆர்யன் கான் புதிய இணையத் தொடரை இயக்கியுள்ளார்.

இந்தத் தொடர் நெட்பிளிக்ஸில் 2025இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன் கான் படத்தின் அறிவிப்பை ஷாருக்கான் வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிவிப்பை பகிர்ந்து தயாராக இருங்கள் என்று அனிருத் பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம், ஆர்யன் கான் படத்துக்கு அனிருத் இசையமைப்பது உறுதி ஆகியுள்ளது. ஏற்கெனவே, ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அனிருத் அறிமுகமாகி இருந்தார்.

ஆர்யன் கான் சர்ச்சை

மும்பை-கோவா சென்ற சொகுசுக்கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கடந்த 2021ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம்: மேயர் பிரியா விளக்கம்

தேமுதிக எங்கள் குழந்தை; அம்மாவாக எனக்கு கடமை அதிகம்: பிரேமலதா

இன்று 4, நாளை 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

டி20 உலகக் கோப்பைக்கு அனிருத் இசையில் புதிய பாடல்!

ஸ்டீவ் ஸ்மித் 2.0..! டி20 உலகக் கோப்பையில் இடம்பெறாதது ஏன்?

SCROLL FOR NEXT