மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அல்லு அர்ஜுன் 
செய்திகள்

க்யூட்டான மகிழ்ச்சியே..! மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அல்லு அர்ஜுன்!

நடிகர் அல்லு அர்ஜுன் தனது மகள் பிறந்தநாளுக்கு விடியோ பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். ஸ்நேகா ரெட்டியை 2011இல் திருமணம் செய்த அல்லு அர்ஜுனுக்கு அல்லு அயான் (10) என்ற ஆண் குழந்தையும் அல்லு அர்ஹா (8) என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.

சமீபத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நிகழ்ச்சியில் தனது மகன், மகளுடன் கலந்துகொண்டார் அல்லு அர்ஜுன். அந்த நிகழ்ச்சியில் அவரது மகள் தெலுங்கில் அழகாக பேசிய விடியோ இணையத்தில் வைரலானது.

இன்று அந்தப் பெண் குழந்தையின் பிறந்தநாள். இதற்காக தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ வெளியிட்டு அல்லு அர்ஜுன் கூறியதாவது:

எனது வாழ்க்கையின் கியூட்டான மகிழ்ச்சி என்னுடைய அர்ஹாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். 8 வருட தூய்மையான மகிழ்ச்சி. உன்னுடைய இருப்பு என் வாழ்க்கையை இனிப்பாகவும் அளவில்லா அன்பாலும் அதிகமான அணைப்புகளாலும் முத்தங்களாலும் நிரப்பியுள்ளது என்றார்.

அல்லு அர்ஜுன் மனைவி ஸ்நேகா ரெட்டி புகைப்படங்களைப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “எனது இனிப்பான, க்யூட்டான, இரக்க குணமுள்ள, நேர்மறையான சிந்தனையுள்ள குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.

தற்போது, புஷ்பா - 2 திரைப்படம் வரும் டிச.5ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் புரமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் ஓரணியில் திரள வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

SCROLL FOR NEXT