முகப்பு
செய்திகள்

கேம் சேஞ்சர் 3-வது பாடல் அறிவிப்பு!

கேம் சேஞ்சர் 3-வது பாடல் குறித்து...

Updated On : 24 நவம்பர், 2024 at 6:03 AM
பகிர்:

கேம் சேஞ்சர் படத்தின் மூன்றாவது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் அரசியல் கதையாக உருவாகியுள்ளது. இந்தியன் - 2 படத்தின் தோல்வியால் கடும் விமர்சனங்களைச் சந்தித்த ஷங்கர் இப்படத்தில் அதன் குறைகளை நீக்கி முழுநீள பிரம்மாண்ட கமர்சியல் படமாக தயார்படுத்தி வருகிறார்.

எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க: விடுதலை - 2 டிரைலர் தேதி!

முன்னதாக, தமன் இசையமைத்த கேம் சேஞ்சரின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றிருந்தது. தொடர்ந்து, டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், படத்தின் மூன்றாவது பாடலை நவ.28 ஆம் தேதி வெளியிட உள்ளதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படம் அடுத்தாண்டு ஜன.10 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →