செய்திகள்

குட் பேட் அக்லி இசையமைப்பாளர் மாற்றம்?

குட் பேட் அக்லி அப்டேட்...

DIN

குட் பேட் அக்லி திரைப்படத்தின் இசையமைப்பாளரை மாற்ற உள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருக்கிறார். அங்கு, இவருக்கான இறுதிக்கட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடிக்கிறார்.

அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். படத்தை பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

படத்தின் அறிவிப்பு வெளியானபோது தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இசையமைப்பாளரை மாற்றும் திட்டத்தில் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாகவும் அவருக்குப் பதில் ஜிவி பிரகாஷிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT