முகப்பு
செய்திகள்

புஷ்பா 2 தணிக்கைச் சான்றிதழ்!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள பிஷ்பா 2 படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது.

Updated On : 28 நவம்பர், 2024 at 1:39 PM
புஷ்பா 2 போஸ்டர்.
பகிர்:

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா - 2 திரைப்படத்தை டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் 11,000 திரைகளில் வெளியிட உள்ளனர். படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியானது.

பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்ட படமென்பதால் டிரைலர் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கின்றன. குறிப்பாக, அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்களிடம் வைராகியுள்ளது.

இந்த நிலையில் படத்திற்கு மத்திய தணிக்கைச் சான்றிதழ் வாரியம் யு/ஏ என வழங்கியுள்ளதாக படக்குழு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளது.

படத்தின் புரமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், திங்கள்கிழமை (நவ. 25) படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இறுதி நாளில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா கலந்துகொண்ட பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 21 நிமிஷங்கள் என தகவல் வெளியாகியிருந்தது.

இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி 100 மில்லியன் (10 கோடி) வரை டிரைலருக்கான பார்வைகளை கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →