முகப்பு
செய்திகள்

வேட்டையன் வெற்றிக்காகக் காத்திருக்கும் விடாமுயற்சி?

Updated On : 6 அக்டோபர், 2024 at 12:14 PM
பகிர்:

விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் குறித்த அப்டேட்கள் தாமதமாகி வருகின்றன.

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அஜித் குட் பேட் அக்லியில் நடித்து வருகிறார்.

இப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக வெளிவரும் என அறிக்கப்பட்டிருந்தது. ஆனால், விடாமுயற்சி படமே முடிவடையாமல் இருப்பதால், பொங்கலுக்கு விடாமுயற்சியை வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது.

ஆனால், இந்தியன் - 2 படத்தின் தோல்வியால் லைகா நிறுவனம் வர்த்தக ரீதியாக பெரிய பின்னடவைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, வேட்டையன் மற்றும் விடாமுயற்சி படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வந்ததால் நிதி நெருக்கடிகள் ஏற்பட்டதாகப் பேச்சு எழுந்தது. அதற்காகவே, விடாமுயற்சி படப்பிடிப்பை சில நாள்கள் நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்த நிலையில், வேட்டையன் திரைப்படம் அக். 10 ஆம் தேதி வெளியாகிறது. ஜெயிலர் வெற்றியால் ரஜினியின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.

இதனால், வேட்டையன் எதிர்பார்த்ததைவிட பெரிய வெற்றியைப் பெற்றால், விடாமுயற்சியின் அடுத்த அப்டேட்கள் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.