செய்திகள்

கங்குவா ரூ. 2000 கோடி வசூலிக்கும்: ஞானவேல் ராஜா!

கங்குவா படத்தின் வணிகம் குறித்து...

DIN


கங்குவா திரைப்படத்தின் வணிகம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. பின், வேட்டையன் திரைப்படத்தின் வெளியீட்டால், கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக். 20 ஆம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற உள்ளதாகத் தகவல்.

தற்போது, படத்திற்கான புரமோஷன் நேர்காணல்களில் படக்குழுவினர் கலந்துகொண்டு வருகின்றனர். அப்படியான நேர்காணல் ஒன்றில், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம், “கங்குவா ஆயிரம் கோடி வசூலிக்குமா?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு ஞானவேல் ராஜா, “எவ்வளவு வசூலித்தாலும் எங்கள் நிறுவனம் கட்டும் ஜிஎஸ்டி தொகையை பொதுவெளியில் பகிர்கிறோம். கங்குவா திரைப்படம் ரூ. 2000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். நீங்கள் ஆயிரம் கோடி எனக்கூறி மன உளைச்சல் செய்கிறீர்களே..” என சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

மேலும், வட இந்தியாவில் 3500 திரைகளில் கங்குவாவை வெளியிடுவதற்காக மட்டும் ரூ.22 கோடி செலவு செய்திருப்பதையும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம்: உயர் நீதிமன்றம்

கண்களால் கைது செய்... ஆசியா பேகம்!

கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

SCROLL FOR NEXT