மும்பை ரசிகர்களுடன் சூர்யா!
கங்குவா படத்தின் புரமோஷன் நிகழ்வில்...
நடிகர் சூர்யா மும்பையில் தன் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது. அதற்கு முன், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக். 20 ஆம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற உள்ளதாகத் தகவல்.
Advertisement
தற்போது, படத்திற்கான புரமோஷன் நேர்காணல்களில் படக்குழுவினர் கலந்துகொண்டு வருகின்றனர். இன்று மும்பையில் நடைபெற்ற புரமோஷனில் சூர்யா கலந்துகொண்டார்.
இதையும் படிக்க: லப்பர் பந்து ஓடிடி வெளியீடு ஒத்திவைப்பு!
அப்போது, ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். நடிகர் சூர்யாவும் அவர்களுடன் இணைந்து தற்படங்களை எடுத்து மகிழ்ந்தார்.