நடிகர் ஜீவா. 
செய்திகள்

நீண்ட நாள்களுக்குப் பிறகு வெற்றி விழா..! நடிகர் ஜீவா நெகிழ்ச்சி!

நடிகர் ஜீவா தனது படத்தின் வெற்றி குறித்து பேசியதாவது...

DIN

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய பிளாக் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழின் முன்னணி நடிகராக இருந்தாலும் வெற்றிப் படத்தைக் கொடுக்க முடியாமல் இருந்தார் ஜீவா. அவரது கதை தேர்வுகளும், திரைப்படங்களும் சரியாக இருப்பதில்லை என ரசிகர்களிடம் விமர்சனங்கள் எழுந்தன.

இதனை கருத்தில்கொண்டோ என்னவோ, நீண்ட காலத்திற்குப் பின் ஜீவா பிளாக் படத்தில் வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

கேஜி பாலசுப்ரமணி இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் ஹாரராக உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரிதாகக் கவனம் பெற்று வருகிறது. அக். 11 ஆம் தேதி வெளியானபோது சில திரைகளே ஒதுக்கப்பட்டிருந்தன.

தற்போது, படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதன் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில் நடிகர் ஜீவா பேசியதாவது:

நீண்ட நாள்களுக்குப் பிறகு எனது படத்தின் வெற்றி விழா கொண்டாடப்படுகிறது. இந்தப் படத்தை வெற்றிபெற செய்த மக்களுக்கு நன்றி. நாங்கள் கைதட்டலுக்கு ஏங்குகிற சாதி என டிஸ்யூம் படத்தில் ஒரு வசனம் வரும். அதுதான் நாங்கள். மேலும் வெற்றிப்படங்களில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

ரசிகர்களுடன் படம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. திரில்லர் கதை என்பதாலும் நானும் படப்பிடிப்பில் மாற்றி மாற்றி நடித்ததை ஒழுங்கான முறையில் பார்க்கும்போது நல்ல அனுபவமாக இருந்தது.

இனிமேலாவது என்னுடைய வெற்றி விழாவை நல்ல ஓட்டல்களில் வைக்க வேண்டும். குடும்பங்களாக கொண்டாடும் வகையில் பார்டியுடன் ஏற்பாடு செய்ய வேண்டும் என கலகலப்பாக பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT