நடிகர் விஜய் உடன் லோகேஷ் கனகராஜ் .  
செய்திகள்

லியோ ஓராண்டு நிறைவு..! லோகேஷ் கனகராஜ் கூறியதென்ன?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்து பதிவிட்டதாவது...

DIN

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் லியோ.

 விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. அதேமாதிரி முதல்நாள் வசூலிலும் படம் சாதனை படைத்தது.

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடித்திருந்தனர்.

கோட் படம் லியோ அளவுக்கு வசூலில் வெற்றிபெறவில்லை. தற்போது விஜய் 69 படத்தினை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து கூலி படத்தினை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், லியோ திரைப்படம் வெளியாகி ஒருவருடம் ஆனதைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

பல் நினைவுகள், பல கற்பிதங்கள், பலவிதமான ஆச்சரியமான தருணங்கள். லியோ எப்போதும் எனது மனதுக்கு நெருக்கமான ஒரு படமாகும். இதை நிகழ்த்தியதுக்கு மிக்க நன்றி விஜய்ணா.

தங்களது வியர்வையும் ரத்தத்தையும் கொடுத்து இந்தப் படத்துக்காக உழைத்தவர்களுக்கும் ரசிகர்களுக்கும் எப்போதும் நன்றிக்கடன்பட்டவனாக இருப்பேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT