ரஞ்சித்தை வீழ்த்தி கேப்டனான தர்ஷிகா படம் | எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸில் புது வரலாறு: மீண்டும் கேப்டனானார் தர்ஷிகா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக தர்ஷிகா கேப்டனாகியுள்ளார்.

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக தர்ஷிகா கேப்டனாகியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது முறையாக ஒருநபர் ஏற்கெனவே கேப்டனாகியுள்ளார் என்றாலும், மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக ஒருவர் கேப்டனாவது இதுவே முதல்முறை.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 15வது நாளான இன்று (அக். 21) மூன்றாவது வாரத்தின் தொடக்கமாகும். இதனால் இந்த வாரத்துக்கான கேப்டனை தேர்வு செய்வதற்கான போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பெண்கள் அணியிலிருந்து தர்ஷிகாவும், ஆண்கள் அணியிலிருந்து ரஞ்சித்தும் கேப்டன் பொறுப்புக்கான போட்டியில் பங்கேற்றனர். இதில், தர்ஷிகா சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார். இதனால் இந்த வாரத்துக்கான கேப்டனாக தர்ஷிகா பொறுப்பேற்றுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக தர்ஷிகா கேப்டனாகியுள்ளார். பிக் பாஸ் வரலாற்றில் இது முதல்முறை. இதனால், பிக் பாஸ் வீட்டில் இருந்த பெண்கள் அனைவரும் தர்ஷிகாவை கொண்டாடினர்.

இதையும் படிக்க | மனசாட்சி என்றால் என்ன? பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெடித்த சர்ச்சை!

பின்னர் நாமினேஷன் நடைபெற்றது. பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தலா இரு நபர்களைத் தேர்வு செய்து நாமினேஷன் செய்யலாம். அதிக நபர்களால் தேர்வு செய்யப்பட்ட நபர், நாமினேஷன் பட்டியலில் இடம்பெறுவர்.

அதன்படி, நாமினேஷன் பட்டியலில் ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா ஜனனி, செளந்தர்யா, தர்ஷா குப்தா, ஆகியோர் இடம்பெற்றனர்.

இதேபோன்று ஆண்கள் அணியில் சத்யா, முத்துக்குமரன், அருண் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT