நடிகர் சிவகார்த்திகேயன். 
செய்திகள்

அமரன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

அமரன் சென்சார் அப்டேட்...

DIN

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.

படத்தின் பாடல்கள், ராணுவப் பின்னணி என ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள், சாய் பல்லவியுடான காதல் காட்சிகள் என டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், 2 மணி 48 நிமிடங்கள் (2.48) கால அளவு கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT