நடிகை பிரணிதா 
செய்திகள்

ஆண் குழந்தைக்கு தாயானார் பிரணிதா!

நடிகை பிரணிதாவுக்கு 2ஆவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

DIN

அருள்நிதியுடன் 'உதயன்', கார்த்தியுடன் 'சகுனி', சூர்யாவுடன் 'மாசு என்கிற மாசிலாமணி' போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா.

தமிழில் கடைசியாக அதர்வாவுடன் இணைந்து 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்தில் நடித்திருந்தார். 

கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் ஏராளமான படங்களில் பிரணிதா நடித்திருக்கிறார்.

பிரணிதாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2021இல் பிரணிதாவுக்கு திருமண நடைபெற்றது.

ஏற்கனவே 2 வயதில் ஒரு பெண் குழந்தையுள்ளது. தற்போது 2ஆவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதை ஆங்கில ஊடகத்துக்கான பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்தான் 2வயதாகும் மகளின் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

கர்ப்பமாக இருக்கும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்திலும் நேற்று பகிர்ந்திருந்தார் பிரணிதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT